சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நெல்லுக்கு கிறைத்த நீர்  ! கவிஞர் இரா .இரவி !

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

நெல்லுக்கு கிறைத்த நீர் வீணாவதில்லை 
நெல் மணிகளாக விளைந்து செழிக்கும் !
முப்போகம் கண்டா விவசாயம் இன்று 
முழுவதும் பொய்த்து ஒரு போகத்திற்கு வழியில்லை !
கர்நாடகமோ காவிரியைத்  திறக்க மறுக்கிறது 
கேரளமோ முல்லை பெரியாற்றில் உயர்த்திட தடுக்கிறது !
ஆந்திரமோ பாலாற்றின் குறுக்கே உயர்த்தி விட்டது 
அண்டை மாநிலங்கள் வஞ்சித்து மகிழ்கின்றன !
இரண்டு வெவ்வேறு நாடுகள் கூட தண்ணீரை  
இருவரும் அன்பாகப் பகிர்ந்து கொள்கின்றனர் !
ஒரே நாடான இந்தியாவில்  தண்ணீர் பகிர்வதில்
ஒருவருக்கொருவர் எந்நாளும் சண்டை !
பகிர்ந்து உண்ணும் பழக்கம் புரியவில்லை 
படிக்கவில்லை ஒப்பற்ற நம்  திருக்குறள் !
வடக்கே ஆறுகளில்  வெள்ளம்  ஓடுகின்றன 
தெற்கே  ஆறுகள் பாலைவனம் ஆகின்றன !
ஒரே நேரத்தில் வெள்ளமும் வறட்சியும் 
ஒரே நாட்டில் வருவது முறையோ சிந்திப்பீர் !
நெல்லுக்கு இறைக்க தண்ணிர் தாருங்கள் 
நாளும் இரக்கத்தோடு நடந்து கொள்ளுங்கள் !
வீணாக்க கடலில் கலக்கும் தண்ணீரை 
விவேகமாகப் பயன்படுத்திட முன்வாருங்கள் !
இருக்கின்ற அணைகள் இந்தியாவிற்கு போதும் 
இனி புதிதாக யாரும் அணை கட்டக்  கூடாது !
விவசாயிகள் தற்கொலை நாடாதிருக்க வேண்டும் 
விவசாயிகள் மன மகிழ்வோடு வாழ வேண்டும் !
இமயம் முதல் குமரிவரை ஆறுகளால் இணைத்து 
இந்தியாவை வளமான நாடாக மாற்றுவோம் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.